Web Counter - Mirage or Real..??
கணினித் தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.
என் வலைப்பதிவை எத்துணை பேர் வந்து பார்வையிடுகிறார்கள் என்பதை அறிய இலவசமாக வழங்கப்படும் சேவையான web-counter தளத்திலிருந்து இலவச மென்பொருளை என் வலைப்பதிவில் பொருத்தினேன். அது என்னடாவென்றால் சென்னையில் ஆட்டோ மீட்டர்கள் சூடுவைத்து ஓட்டுகிறார்கள் என்று சொல்கிறார்களே அந்த மாதிரி ஓடுகிறது.
ஒவ்வொரு முறையும் refresh செய்யும் போதெல்லாம் சமர்த்தாக ஒரு நம்பரை கூட்டிக் கொள்ளும் அந்த மென்பொருள் பத்துநிமிடம் கழித்து வந்து பார்த்தால் குறைந்தது 30 முதல் 40 எண்களைக் கூட்டிக் கொள்கிறது. அந்த இடைவெளியில் அத்துணை பேர் வந்து என் வலைப்பதிவை பார்வையிட்டு சென்றிருப்பார்களா என்று ஐயமாக இருக்கிறது.
கொஞ்ச நாட்கள் முன் ஆரம்பித்த என் வலைப்பதிவை (அரசியல்வாதிகள் மேடைகளில் எதிர்க்கட்சிக்காரர்களை திட்டி முழங்குகிற பாஷையில் சொன்னால், முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான) கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்த்திருப்பார்கள் என்று நம்ப என் மனம் மறுக்கிறது.
'வேண்டுமானால் என் வலைப்பதிவிற்கு வா. பதில் சொல்கிறேன்' என்று மிரட்டாத, தொழில்நுட்பம் அறிந்த நண்பர்கள் இதனை விளக்கித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
FYI - எனக்கும் கணினி தொழில்நுட்பம் ஒரு அளவுக்கு தெரியும் ... ஆனால் , இது எனக்கு விளங்கவில்லை ...
Cheers,
Sudhan

3 Comments:
encrypted :(
@Sakina - Sorry if you don't know to read Tamil... Will try to post this english too...
wordpress does the count based on ip address and i find that to be accurate. it doesn't include the ip which I used to login be it my laptop, or my office desktop (officela vera enna perusa vella vandhuda poovudhu?)
Blogger,,, i am not sure.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home