கிறுக்கல்கள் சில ....
----கிறுக்கல்கள் சில ....-----
உண்மை ஒன்று ....
துயர் வந்து என்னை தீண்டும் நேரம் ,
என் அருகில் நீ இருந்து கதை சொன்ன
நினைவு வரும் என்றால் , துயர் கூட விலகி விடும் ...
தொடரும் மௌனம் ...!!
எங்கோ , தவறுகள் நடந்தன ...
எவ்வளவோ நடந்த பிறகும்
மன்னிக்க நான் தயார் ..
அகம் திறந்து பேச எண்ணினேன் புறவெளியில் ,
நின்று பேசவும் நான் இல்லை என்று
மிக அவசரமாய் சென்றது ஏன் தோழி ...
மறுபடியும் மௌனத்தில் பிரிகின்றேன் ....!!
ஆட்கொள்ள விரும்பும் வலி ....
எங்கிருந்தோ வந்து
சட்டென்று மோதுது வலி...,
அந்த நிமிடம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வலிக்கு உண்டென்று..!!
ஒரு வலியானது மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...
என் வலிகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகிறேன்
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட...
சொல்லாதே யாரும் கேட்டால் ...
அடிக்கடி
நீ கோவிலுக்குப் போவதால்
உனக்குமட்டும்
ஒன்று சொல்கிறேன்
கேள்
"இந்த பூமியில்
கடவுள் இல்லை " என
சொன்னவரின் தோன்றல் நான் !!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home